புத்துயிர்ப்பு/லியோ டால்ஸ்டாய் நாவல்/முதல் பாகம்/அத்தியாயம் 1,2,3

                           புத்துயிர்ப்பு
                   லியோ டால்ஸ்டாய்
தமிழ் மொழிபெயர்ப்பு  ரா.கிருஷ்ணய்யா
                          (முதல் பாகம்)
                                 மத்தேயு 18, 21. அப்பொழுது 
பேதுரு அவரிடம்‌ வந்து: ஆண்ட 
வரே, என்‌ சகோதரன்‌ எனக்கு 
விரோதமாய்க்‌ குற்றம்‌ செய்து வந்‌ 
தால்‌, நான்‌ எத்தனை தரம்‌ மன்னிக்க 
வேண்டும்‌? ஏழு தரமோ என்று கேட்‌ 
டான்‌. 
22.. அதற்கு இயேசு: ஏழு தரம்‌ 
மாத்திரம்‌ அல்ல, ஏழெழுபது தரம்‌ என்று உனக்குச்‌ சொல்கிறேன்‌, 
என்றார்‌. 
மத்தேயு 7, 3. நீ உன்‌ கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல்‌, உன்‌ சகோதரன்‌ கண்ணிலிருக்கற துரும்பைப்‌ பார்க்கிறதென்ன? 
யோவான்‌ 8, 7. ...உங்களில்‌ 
பாவமில்லாதவன்‌ இவள்‌ மேல்‌ முதலாவது கல்லெறியக்‌ கடவன்‌... 
லூக்கா 6, 40, சீடன்‌ தன்‌ குரு 
வுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன்‌ எவனும்‌ தன்‌ குருவைப்‌ போலி 
ருப்பான்‌. 
                                 1
சிறு பரப்பில்‌ நூறாயிரக்‌ கணக்கானோர்‌ நெரிசலாய்‌ 
அடைந்து கொண்டு எவ்வளவுதான்‌ நிலத்தை கருக்குலைக்க 
முயன்றாலும்‌, எதுவுமே முளைக்காதவாறு எவ்வளவுதான்‌ கற்‌களைப்‌ பரப்பி நிலத்தை மூடினாலும்‌, பசும்‌புல்‌ தளிர்க்க முடியாமல்‌ எவ்வளவுதான்‌ மழித்தெடுத்தாலும்‌, நிலக்கரியையும்‌ 
எண்ணெயையும்‌ எவ்வளவுதான்‌ எரித்துப்‌ புகைத்தாலும்‌, 
எவ்வளவுதான்‌ மரங்களை எல்லாம்‌ வெட்டியகற்றியும்‌ விலங்குகளையும்‌ பறவைகளையும்‌ விரட்டியடித்தும்‌ வந்தாலும்‌--வசந்‌தம்‌ வசந்தமாகவே இருந்தது, நகரத்திலுங்கூட. 
கதிரவன்‌ ஒளி வீசிக்‌ கதகதப்பூட்டினான்‌. அடியோடு 
அகற்றப்பட்டுவிடாத இடங்களில்‌ புற்கள்‌ புத்துயிர்‌ பெற்று வீதியோரங்களில்‌ மட்டுமின்றி, சரக்‌ கற்களின்‌ இடுக்கு 
களிலும்‌ துளிர்த்துக்‌ கிளம்பின. பூர்ச்சை, நெட்டிலிங்கம்‌, 
பறவைச்‌ செர்ரி மரங்களில்‌ கமகமக்கும்‌ பிசுபிசுப்பான பைந்‌தளிர்கள் முகிழ்த்துக்‌ கொண்டிருந்தன. லைம்‌ மரங்களில்‌ 
மொக்குகள்‌ விம்மிப்‌ புடைத்தெழுந்தன. அண்டங்காக்கை 
களும்‌ குருவிகளும்‌ புறாக்களும்‌ வசந்த பருவஆனந்த ஆரவாரத்‌ 
துடன்‌ தமது கூடுகளைக்‌ கட்டிக்‌ கொண்டிருந்தன. வெயிலால்‌ 
வெதுவெதுப்பு ஊட்டப்‌ பெற்ற ஈக்கள்‌ சுவர்களுக்கு அருகே 
முசுமுசுத்தன. மரஞ்செடிகள்‌, பறவைகள்‌, பூச்சிகள்‌ எல்லாம்‌ 
களிப்புற்று மகிழ்ந்தன, குழந்தைகளும்‌ குதூகலித்தனர்‌. 
ஆனால்‌ மாந்தர்கள்‌, வயது வந்த மனிதர்கள்‌, தம்மைத்‌ ' 
தாமும்‌ ஒருவரையொருவரும்‌ ஏமாற்றிக்‌ கொள்வதையும்‌ 
வதைத்துக்‌ கொள்வதையும்‌ விட்டொழித்தார்களில்லை, 
வசந்த பருவத்தின்‌ இந்தக்‌ காலைப்‌ பொழுதை, எல்லா 
உயிர்க்கும்‌ நலம்‌ பயக்கும்‌ பொருட்டு அமைந்திருக்கும்‌ இறைவனது உலகின்‌ இந்த எழிற்‌ கோலத்தை, உள்ளத்தில்‌ அமைதியையும்‌ இசைவையும்‌ அன்பையும்‌ ஊற்றெடுக்கச்‌ செய்யும்‌ 
படியான இதனை, இவர்கள்‌ புனித மிக்கதென்றோ, முக்கியமானதென்றோ நினைக்கவில்லை. ஒருவரையொருவர்‌ அடக்கியாண்டு எப்படி அதிகாரம்‌ புரியலாம்‌ என்பதையே புனிதமானதெதன்றும்‌ முக்கியத்துவம்‌. வாய்ந்ததென்றும்‌ கருதினர்‌, 
ஆக, மாநிலச்‌ சிறைக்கூடத்தின்‌ அலுவலகத்தில்‌, வசந்‌தத்தின்‌ அருளும்‌ ஆனந்தமும்‌ மனிதர்க்கும்‌ விலங்குக்கும்‌ 
வழங்கப்‌ பெறும்‌ பேறாகுமென்பது புனிதமானதாகவோ, 
முக்கியமானதாகவோ கருதப்படவில்லை; முறைப்படி முத்திரையிட்டுப்‌ பதிவு செய்து முந்திய நாளன்று அங்கே சேர்ப்பிக்‌ 
கப்பட்டிருந்த ஓர்‌ அறிவிப்புத்‌ தாள்தான்‌ புனித மிக்கதாக 
வும்‌ முக்கியமானதாகவும்‌ கருதப்பட்டது. விசாரணைக்‌ கைதிகளாகக்‌ தற்போது அந்தச்‌ சிறைக்கூடத்தில்‌ காவலில்‌ இருந்த 
ஓர்‌ ஆடவரும்‌ இரு பெண்டிருமான மூவரை இந்த ஏப்ரல்‌ 
திங்கள்‌ 28ஆம்‌ நாளன்று காலை 9 மணியளவில்‌ நீதிமன்றத்‌ 
துக்குக்‌ கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென அந்த அறிவிப்புத்‌ தாள்‌ ஆணையிட்டது. இந்தப்‌ பெண்டிரில்‌ ஒருத்தி 
தலைமைக்‌ குற்றவாளி என்பதால்‌ அவளைக்‌ தனியே கொண்டு 
வர வேண்டும்‌ என்றது அது. ஆகவே இப்போது, ஏப்ரல்‌ 
28ஆம்‌ நாள்‌ காலை எட்டு மணிக்கெல்லாம்‌ தலைமைச்‌ சிறைக்‌
காவலர்‌ சிறைக்கூடத்தின்‌ பெண்டிர்‌ பகுதியினது நடையினுள்‌ 
நுழைந்தார்‌. நடை இருண்டிருந்தது, நாற்றம்‌ சகிக்க முடிய 
வில்லை. நரைத்து சுருள்‌ முடியும்‌ வேதனையால்‌ வாடிய 
முகமும்‌ கொண்ட ஒரு பெண்‌ அவர்‌ பின்னால்‌ சென்றாள்‌. 
சட்டைக்‌ கைகளில்‌ பொன்னிற மணிக்கயிறு பின்னிய 
உடுப்புடன்‌ நீலப்‌ பூக்கரை தைத்த இடுப்பு வார்‌ அணிந்திருந்த அவள்‌ பெண்‌ சிறைக்‌ காவலர்‌. 
"மாஸ்லவாதானே வேண்டும்‌?" என்று கேட்டவாறு 
அவள்‌ அப்பகுதியில்‌ பணி புரிந்த காவலருடன்‌ கூட நடையின்‌ சிறையறைகளில்‌ ஒன்றின்‌ கதவிடம்‌ சென்றாள்‌. 
'தடாரென'த்‌ தாழ்ப்பாளைத்‌ தள்ளிக்‌ காவலர்‌ அந்தக்‌ 
கதவைத்‌ திறந்தார்‌, நடையில்‌ இருந்ததினும்‌ கேடான 
காற்று அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்தது. 
"மாஸ்லவா! நீதிமன்றத்துக்குப்‌ புறப்படு?” என்று 
கூச்சலிட்டுக்‌ கத்தினார்‌, உடனே கதவை ஒருக்களித்து மூடி 
விட்டு வெளியே காத்திருந்தார்‌. 
வயல்‌ வெளிகளின்‌ விறுவிறுப்பூட்டும்‌ தூய காற்று 
நகருக்குள்‌ வீசிச்‌ சிறைக்கூடத்தின்‌ வெளிமுற்றத்துக்குங்கூட 
வந்திருந்தது. ஆனால்‌ இங்கே நடையினுள்‌ அடைத்திருந்த 
பிணிக்‌ காற்று புதிதாக உள்ளே வருவோர்‌ திணறித்‌ திண்‌டாடும்படிக்‌ கக்கூஸ்‌ வீச்சமும்‌ கீலின்‌ நெடியும்‌ முடைநாற்றமும்‌ மிக்கதாக இருந்தது. துர்நாற்றக்‌ காற்றைச்‌ சுவாசித்துப்‌ 
பழக்கப்பட்டவளான பெண்‌ காவலராலுங்கூட இதைச்‌ 
சகிக்க முடியவில்லை. வெளிமுற்றத்திலிருந்து அப்போதுதான்‌ 
அவள்‌ வந்திருந்தாள்‌, நடையினுள்‌ நுழைந்ததும்‌ சோர்வு 
தாங்க மாட்டாமல்‌ அவளுக்குத்‌ தலை சுற்றியது, 
அறைக்குள்ளிருந்து சந்தடி எழுந்தது, பெண்களின்‌ 
பேச்சுக்‌ குரலும்‌ வெறுங்‌ காலில்‌ நடப்போரது தடதடப்பும்‌ 
கேட்டன. 
"உன்னைத்தான்‌, மாஸ்லவா! வா சீக்கிரம்‌!'?" என்று 
கதவின்‌ சாளரத்தினுள்‌ கத்தினார்‌ தலைமைச்‌ சிறைக்‌ காவலர்‌. 
நடுத்தர உயரமும்‌ நிறைவான முழுமார்புமுடைய ஓர்‌ இளம்‌ பெண்‌ இரண்டு நிமிடத்துக்கு எல்லாம்‌ அறைக்குள்‌ளிருந்து தயக்கமின்றி வேகமாய்‌ வெளியே வந்து காவலருக்குப்‌ பக்கத்தில்‌ நின்றாள்‌. வெள்ளைச்‌ சட்டையும்‌ பாவாடையும்‌ அவற்றுக்கு மேல்‌ சாம்பல்‌ நிற மேலங்கியும்‌ அணிந்‌திருந்தாள்‌ அவள்‌. காலில்‌ லினென்‌ காலுறையும்‌ சிறைக்கூட 
மிதியடியும்‌ போட்டிருந்தாள்‌. தலையில்‌ அவள்‌ கட்டியிருந்த 
வெள்ளைத்‌ தலைக்‌ குட்டைக்கு அடியிலிருந்து வேண்டுமென்றே 
வெளியே இழுத்து விட்டாற்‌ போல, சில கரிய கூந்தல்‌ சுருள்‌கள்‌ அவளது நெற்றியில்‌ தொங்கின. அந்தப்‌ பெண்ணின்‌ 
முகம்‌ நெடுநாளாய்‌ வெளியே வராமல்‌ அடைபட்டிருப்போரிடம்‌ காணக்‌ கூடிய அந்தத்‌ தனிவகை வெளுப்புடையதாக 
இருந்தது - நிலவறையில்‌ வைக்கப்பட்ட உருளைக்கிழங்கில்‌ 
முளைத்தெழும்‌ குருத்துக்களை நினைவுபடுத்திய வெளுப்பு அது. 
கரளையான அவளது அகன்ற கைகளிலும்‌, மேலங்கியின்‌ 
விரிந்த காலர்களுக்கு உள்ளிருந்து வெளியே தெரிந்த அவளது 
முழு நீளக்‌ கழுத்திலும்‌ இதே வெளுப்பு படிந்திருந்தது. அவளுடைய முகத்தின்‌ இந்தச்‌ சோபையான வெளுப்புக்கு நேர்‌மாறாய்‌ இருந்தன,கொஞ்சம்‌ துருத்திக்கொண்டு துருதுருத்துப்‌ 
பளிச்சிட்ட அவளது கருநிறக்‌ கண்கள்‌; அவற்றில்‌ ஒன்று 
சற்றே ஓரப்‌ பார்வை கொண்டது. நிறைவான முழு மார்‌பைக்‌ துருத்திக்‌ கொண்டு நேரே நிமிர்ந்து நடப்பவள்‌ அவள்‌. எந்த உத்தரவுக்கும்‌ கீழ்ப்படியத்‌ தயாராக இப்போது அவள்‌ தலையைச்‌ சற்றே பின்னால்‌ சாய்த்துக்‌ காவலரின்‌ கண்களை 
உற்று நோக்கியவாறு நின்றிருந்தாள்‌.காவலர்‌ அறைக்‌ கதவை இழுத்து மூடப்‌ போன நேரத்தில்‌, முகமெல்லாம்‌ வெளுத்துச்‌ சுருக்கம்‌ விழுந்து கடுப்பான தோற்றமுடைய ஒரு கிழவி 
நரைத்துப்‌ போன வெறுந்‌ தலையை வெளியே நீட்டி, மாஸ்‌லவாவிடம்‌ ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்‌. ஆனால்‌, காவலர்‌ அந்தத்‌ தலையோடு சேர்த்துக்‌ கதவை இழுத்து மூடப்‌ போகவே, தலை உள்ளே மறைந்து கொண்டு விட்டது. அறைக்குள்‌ளிருந்து பெண்‌ணொருத்தி சிரிப்பது காதில்‌ விழுந்தது. மாஸ்லவாவும்‌ புன்னகை புரிந்தவாறு அறைக்‌ கதவிலிருந்த கம்பி வலைச்‌ சாளரத்தின்‌ பக்கம்‌ திரும்பினாள்‌. உட்பக்கத்திலிருந்து கிழவி தனது முகத்தை அந்தச்‌ சாளரத்தில்‌ வைத்‌தழுத்திக்‌ கொண்டு கரகரப்பான குரலில்‌ கூறினாள்‌: 
“முக்கியமானது இதுதான்‌---நீ அதிகம்‌ பேசக்‌ கூடாது, 
மாற்றமின்றி ஒன்றையே சொல்லு, என்ன கேட்டாலும்‌ 
திருப்பித்‌ திருப்பி அதையே சொல்லு""
“சரி, இப்போது இருப்பதினும்‌ மோசமாய்‌ ஒன்றும்‌ 
நேர்ந்துவிட முடியாது, எப்படியோ ஒரு விதமாய்‌ முடிவடைந்தால்‌ போதும்‌'” என்று தலையை ஆட்டியவாறு பதிலளித்தாள்‌ மாஸ்லவா. 
"இரண்டு விதமாய்‌ அல்ல, ஒரு விதமாகத்தான்‌ முடிவடையும்‌'” என்று பெரிய மனிதத்‌ தோரணையில்‌ கிண்டலாய்க்‌ கூறி, “*சரி வா, என்னுடன்‌!" என்றார்‌ தலைமைச்‌ சிறைக்‌ காவலர்‌. அறைக்‌ கதவின்‌ சாளரத்திலிருந்து கிழவியின்‌ கண்‌ 
மறைந்தது; மாஸ்லவா நடையின்‌ நடுப்‌ பகுதிக்குச்‌ சென்று 
தலைமைச்‌ சிறைக்‌ காவலரைப்‌ பின்தொடர்ந்து வேகமாய்‌ 
அடியெடுத்து வைத்து நடந்தாள்‌. அவர்கள்‌ கற்படிகளில்‌ 
மேலிறங்கி, மகளிர்‌ பகுதியையும்‌ விட நாற்றமாகவும்‌ சப்தமாகவும்‌ இருந்த ஆடவர்‌ பகுதியின்‌ சிறையறைகளைக் கடந்து சென்றனர்‌; அறைக்‌ கதவுச்‌ சாளரம்‌ ஓவ்வொன்றிலிருந்தும்‌ கண்கள்‌ அவர்களைப்‌ பின்தொடர்ந்து உற்று நோக்‌கின. சிறைக்கூட அலுவலகத்துக்குள்‌ அவர்கள்‌ நுழைந்தனர்‌; 
அவளை அழைத்துச்‌ செல்வதற்காக வந்திருந்த இரண்டு படையாட்கள்‌ துப்பாக்கி வைத்துக்‌ கொண்டு அங்கே நின்‌றிருந்தார்கள்‌. அலுவலகத்தினுள்‌ உட்கார்ந்திருந்த எழுத்‌தர்‌ ஒருவர்‌ புகையிலையின்‌ புகை வீச்சம்‌ அடித்த ஒரு காகிதத்‌தை அந்தப்‌ படையாட்களில்‌ ஒருவனிடம்‌ தந்து, கைதியைச்‌ 
சுட்டிக்‌ காட்டி, “இதோ இருக்கிறாள்‌, அழைத்துச்‌ செல்‌'' 
என்றார்‌. அந்தப்‌ படையாள்‌ நீழ்னி நோவ்கரதைச்‌ சேர்ந்த விவசாயி, அம்மைக்‌ தழும்பு விழுந்த செந்நிற முகமுடையவன்‌. காகிதத்தை வாங்கிக்‌ கோட்டின்‌ கைப்பட்டை மடிப்புக்குள்‌ செருகிக்‌ கொண்டான்‌. பிறகு கைதியை நோட்டமிட்டு விட்டுப்‌ புடைப்பான தாடையெலும்புடைய சுவாஷ்‌ இனத்தனாகிய தனது சகாவைப்‌ பார்த்துக்‌ கண்ணைச்‌ சிமிட்டியவாறு 
இளித்துக்‌ கொண்டான்‌. கைதியும்‌ இரு படையாட்களும்‌ 
குகைவாயிலுக்குச்‌ சென்றனர்‌. 
தலை வாயிற்‌ கதவில்‌ இருந்த புழைவாய்‌ திறந்திருந்தது. 
இதன்‌ வழியே படையாட்களும்‌ கைதியும்‌ வெளியே சென்று 
வெளிமுற்றத்தைக்‌ கடந்தனர்‌, சரளைக்‌ கற்கள்‌ பதிக்கப்பட்ட 
தெருவின்‌ நடுவே நகரை நோக்கி நடந்தனர்‌. கைதியாக அழைத்துச்‌ செல்லப்பட்டவளை வண்டிக்‌காரர்களும்‌ கடைக்காரர்களும்‌ சமையற்காரிகளும்‌ தொழிலாளர்களும்‌ அரசாங்க எழுத்தர்களும்‌ ஆவலுடன்‌ ஆங்காங்‌கே நின்று பார்வையிட்டனர்‌. “எம்மைப்‌ போல்‌ நல்லபடி நடந்து கொள்ளாமல்‌ தீய வழியில்‌ சென்றால்‌ இப்படித்தான்‌ 
ஆகும்‌” என்று தம்முள்‌ நினைப்பது போலச்‌ சிலர்‌ தலையை 
ஆட்டிக்‌ கொண்டார்கள்‌. குழந்தைகள்‌ பீதியுற்றவர்களாய்‌ அந்தக்‌ கொள்ளைக்காரியை உற்று நோக்கினார்கள்‌; படையாட்‌கள்‌ அவளுடன்‌ செல்கிறார்கள்‌, இனி அவளால்‌ ஒன்றும்‌ செய்ய 
முடியாதென்பதை உணர்ந்த பிறகே அவர்கள்‌ அச்சம்‌ நீங்கி 
அமைதியடைந்தார்கள்‌. கிராமத்திலிருந்து அடுப்புக்‌ கரி 
எடுத்து வந்து நகரில்‌ விற்றபின்‌ தேநீர்‌ அருந்தி விட்டுத்‌ 
திரும்பிய ஒரு விவசாயி, அவளை நெருங்கியதும்‌ தன்‌ மீது 
சிலுவைக்‌ குறியிட்டுக்‌ கொண்டு அவளிடம்‌ ஒரு கோப்பெக்‌ 
காசு கொடுத்தான்‌. கைதியாகச்‌ சென்றவளுக்கு முகம்‌ சிவந்து விட்டது, தலையைக்‌ கவிழ்த்துக்‌கொண்டு வாய்க்குள்‌ 
முணுமுணுத்துக்‌ கொண்டாள்‌. 
எல்லோரது பார்வையும்‌ தன்மீது படிந்திருந்ததை 
உணர்ந்து, தலையைத்‌ திருப்பாமலே அவள்‌, தன்னை உற்று 
நோக்கியோரைக்‌ கடைக்கண்ணால்‌ நோட்டமிட்டவாறு நடந்‌தாள்‌. அவர்களது கவனம்‌ தன்னால்‌ ஈர்க்கப்பட்டது குறித்து 
அவள்‌ மகிழ்ந்து கொண்டாள்‌. அதோடு அங்கு ஒப்பளவில்‌ 
சற்றுத்‌ தூய்மையாயிருந்த வசந்த பருவக்‌ காற்றும்‌ அவளுக்குக்‌ 
களிப்பூட்டிற்று. ஆனால்‌, அவளுக்குக்‌ கால்‌கள் வலித்தன.
பல நாட்களாய்‌ நடக்காதிருந்தவள்‌ சிறைக்கூடத்து முரட்டு 
மிதியடிகளை மாட்டிக்‌ கொண்டு கற்கள்‌ மீது நடக்க நேர்ந்ததும்‌, நடக்க முடியாமல்‌ துன்புற்றாள்‌. தரையைக்‌ கவனித்துத்‌ தக்க இடமாகப்‌ பார்த்து அடி. வைத்துக்‌ காலைக்‌ கூடுமான 
வரை இலேசாக ஊன்றி நடந்தாள்‌. பலசரக்குக்‌ கடை 
ஒன்றை அவள்‌ கடந்து சென்ற போது, கடையின்‌ முன்னால்‌ 
நிம்மதியாகத்‌ தத்தித்‌ திரிந்த புறாக்களிடையே நடக்கையில்‌ 
அவளது பாதம்‌ வெளிர்‌நீலப்‌ புறா ஒன்றின்‌மீது படப்‌ பார்த்தது. உடனே அந்தப்‌ புறா சிறகடித்து எழுந்து அவள்‌ காதை ஒட்டினாற்‌ போல்‌ பறந்து காற்றை வீசிச்‌ சென்றது. 
அவள்‌ மாகிழ்ச்சியுற்றுப்‌ புன்னகை புரிந்தாள்‌, பிறகு அவளுக்குத்‌ தனது நிலைமை நினைவுக்கு வந்ததும்‌ ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக்‌ கொண்டாள்‌. 
********************************
                                2 
கைதி மாஸ்லவாவின்‌ வாழ்க்கை வரலாறு சர்வசாதாரணமானது. 
மாஸ்லவா மணமாகாத பண்ணைக்‌ குடியானவப்‌ பெண்‌ணின்‌ மகளாகப்‌ பிறந்தவள்‌. சகோதரிகளாகிய நிலப்பிரபுத்‌துவ முதுகன்னிச்‌ சீமாட்டியர்‌ இருவருக்குச்‌ சொந்தமான பண்ணையில்‌ இந்தக்‌ குடியானவப்‌ பெண்‌ பால்காரியாக வேலை செய்த தன்‌ தாயுடன்‌ இருந்து வந்தாள்‌. மணமாகாத இந்தப்‌ 
பெண்ணுக்கு ஆண்டுதோறும்‌ ஒரு குழந்தை பிறந்தது.கிராமக்‌ குடிகளிடையே அடிக்கடி நடைபெறுவது போல்‌, வேண்‌டாத பிறவியாகப்‌ பிறந்து தாயின்‌ வேலைக்கு இடைஞ்சலாக 
இருந்த இந்தக்‌ குழந்தை ஒவ்வொன்றும்‌ முறைப்படி ஞானஸ்‌நானம்‌ செய்விக்கப்பட்டது, பிறகு தாயின்‌ கவனிப்பில்லாமல்‌ 
பட்டினியால்‌ விரைவில்‌ மடியும்படி விடப்பட்டது. 
இப்படி ஐந்து குழந்தைகள்‌ மடிந்து போயின. எல்லாக்‌ குழந்தைகளுக்கும்‌ ஞானஸ்நானம்‌ செய்விக்கப்பட்டது, பிறகு பாலின்றி விடப்பட்ட அவை உயிர்‌ நீத்தன. ஆறாவது குழந்தை பெண்‌ குழந்தை, நாடோடி ஜிப்ஸி ஒருவனுக்கு 
மகவாகப்‌ பிறந்தது. ஏனையவற்றுக்கு ஏற்பட்ட கதிதான்‌ 
அதற்கும்‌ ஏற்பட்டிருக்கும்‌; ஆனால்‌ பண்ணையின்‌ முதுகன்னிச்‌ 
சீமாட்டியரில்‌ ஒருவர்‌ பாலேட்டில்‌ நாற்றம்‌ வீசியதென்று பால்காரக்‌ கிழவியைத்‌ திட்டுவதற்காக மாட்டுத்‌ தொழுவத்‌துக்குள்‌ வர நேர்ந்ததால்‌ அந்தப்‌ பெண்‌ குழந்தை பிழைத்துக்‌ 
கொண்டது. பிள்ளையைப்‌ பெற்றவள்‌ மாட்டுத்‌ தொழுவத்‌தில்‌ படுத்திருந்தாள்‌; புதிதாகப்‌ பிறந்த கண்ணுக்கினிய, ஆரோக்கியமான குழந்தை அவளுக்குப்‌ பக்கத்தில்‌ கிடந்தது. உள்ளே வந்த சீமாட்டி கெட்டுப்‌ போன பாலேட்டுக்காக 
மட்டுமின்றி, பிள்ளை பெற்றவளைத்‌ தொழுவத்தில்‌ படுக்கவிட்டதற்காகவும்‌ பால்காரக்‌ கிழவியைத்‌ திட்டினார்‌. வெளியே 
செல்வதற்காகத்‌ திரும்பிய போது அந்தக்‌ குழந்தையைப்‌ பார்த்த சீமாட்டிக்கு அதன்‌ மீது இரக்கம்‌ பிறந்தது, தாம்‌ அதற்குப்‌ பெயரீட்டுக்‌ தாயாக இருக்கப்‌ போவதாக அறிவித்‌தார்‌. அதே போல குழந்தைக்கு ஞானஸ்நானம்‌ செய்வித்து அதற்கு அவர்‌ பெயர்‌ சூட்டினார்‌. பிறகு தமது பெயரீட்டுச்‌ 
சிசுவின்‌ பால்‌ கருணை கொண்டு அதன்‌ தாய்க்குப்‌ பாலும்‌ பணமும்‌ கொடுத்தனுப்பினார்‌. இவ்வாறு அந்தப்‌ பெண்‌குழந்தை சாகாமல்‌ பிழைத்துக்‌ கொண்டது. முதுகன்னிச்‌ 
சீமாட்டியர்‌ இருவரும்‌ அதைச்‌ சாவிலிருந்து மீட்கப்பட்ட சிசுவெனக்‌ குறிப்பிட்டு வந்தனர்‌. குழந்தைக்கு மூன்று வயதான போது அதன்‌ தாய்‌ 
தோய்‌ வாய்ப்பட்டு இறந்து விட்டாள்‌. பால்காரக்‌ கிழவியான அதன்‌ பாட்டிக்கு அது ஒரு சுமையாகி விடவே, சீமாட்டியர்‌ ௮தை அழைத்து வந்து வீட்டில்‌ தம்முடன்‌ வைத்துக்‌ 
கொண்டனர்‌. கருவிழிச்‌ சிறுமி. துடிப்பும்‌ துருதுருப்பும்‌ மிக்கவளாய்‌, இனிமையின்‌ உருவாய்‌ வளர்ந்து முதுகன்னிச்‌ சீமாட்டியரை மகிழ்வித்து வந்தாள்‌. சீமாட்டியர்‌ இருவரில்‌ இளையவரான சோபியா இவானவ்னா அன்பு உள்ளம்‌ கொண்டவர்‌. அவர்தான்‌ முன்பு சிறுமிக்குப்‌ பெயரீட்டுத்‌ தாயாக இருந்தார்‌. மூத்தவரான மரீயா இவானவ்னா கண்டிப்பும்‌ கடுமையும்‌ வாய்ந்தவர்‌. சோபியா 
இவானவ்னா சிறுமிக்கு நேர்த்தியான ஆடைகள்‌ உடுத்தி அவ ளுக்குப்‌ படிப்பதற்குக்‌ கற்றுத்‌ தந்தார்‌, கல்வி ஞானமுடையவளாக அவளை வளர்க்க வேண்டுமென விரும்பினார்‌. ஆனால்‌,மரீயா இவானவ்னா அவளுக்கு எல்லா வேலைகளும்‌ கற்றுத்‌ தந்து நல்ல வீட்டு வேலைக்காரியாகும்படி அவளை வளர்த்திட 
வேண்டுமெனக்‌ கூறி வந்தார்‌. ஆகவே அவளிடம்‌ அவர்‌ கண்டிப்புடன்‌ இருந்தார்‌, அவளைத்‌ கண்டித்தார்‌, கோபங்‌கொண்ட போது சிறுமியை அடிக்கவும்‌ செய்தார்‌. ஏறுமாறான இந்த இரு போக்குகளின்‌ பாதிப்புக்கும்‌ உட்பட்டு வந்த சிறுமி பாதியளவுக்கு வேலைக்காரியாகவும்‌ பாதியளவுக்கு வளர்ப்புப்‌ பெண்ணாகவும்‌ வளரலானாள்‌. காத்கா என்று அவ்‌வளவு தாழ்வாகவும்‌ காத்தென்கா என்று அவ்வளவு உயர்‌வாகவும்‌ இல்லாமல்‌ நடுத்தரமாகத்‌ தொனிக்கும்‌ பெயராகப்‌ பார்த்துக்‌ கத்யூஷா என்று அவளை அவர்கள்‌ அழைக்தனர்‌. 
அவள்‌ துணி தைத்தாள்‌, அறைகளைச்‌ சுத்தம்‌ செய்தாள்‌, 
சாமி படங்களில்‌ சுண்ணம்‌ தேய்த்துப்‌ பளபளப்பாக்கினாள்‌, காப்பிக்‌ கொட்டை வறுத்துத் தூளாக்கினாள்‌, காப்பி கொண்டு வந்து தந்தாள்‌, சில்லரைத்‌ துணிமணிகளைத்‌ துவைத்தாள்‌. சில நேரங்களில்‌ சீமாட்டியருடன்‌ உட்கார்ந்து கொண்டு 
அவர்களுக்குப்‌ புத்தகங்கள்‌ படித்துக்‌ காட்டினாள்‌. பல பேர்‌ அவளை மணந்து கொள்ள முயன்று பார்த்‌தனர்‌, ஆனால்‌, இவர்களில்‌ யாரையும்‌ அவள்‌ ஏற்றுக்‌ கொள்ள 
விரும்பவில்லை. சீமாட்டியரின்‌ வீட்டில்‌ சொகுசாய்‌ வாழ்ந்து 
பழக்கப்பட்டுவிட்ட அவள்‌, தன்னை நாடி வந்த பண்ணை வேலையாட்களுடன்‌ வாழ்வது கடினமாயிருக்குமென நினைத்தாள்‌. 
சீமாட்டியரது வீட்டில்‌ வாழ்ந்து வந்த அவளுக்குப்‌ பதினாறு வயது நிரம்பியது. அப்போது செல்வக்‌ கோமகனும்‌ சீமாட்டியரின்‌ மருமகனுமாகிய மாணவ இளைஞன்‌ அவர்‌களது வீட்டுக்கு வந்திருந்தான்‌. உண்மையைக்‌ கத்யூஷா 
அவனுக்குப்‌ புலப்படுத்தவோ, தன்‌ மனத்துள்ளுங்கூட ஒத்துக்‌ கொள்ளவோ துணியவில்லை என்றாலும்‌, அவன்‌ மீது காதல்‌ கொண்டு விட்டாள்‌. இரண்டு ஆண்டுகளுக்குப்‌ பிற்‌பாடு இந்த மருமகன்‌ போருக்குப்‌ புறப்பட்ட தனது படைப்‌பிரிவுக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தன்‌ அத்தைகளது வீட்டுக்கு 
வந்து நான்கு நாட்கள்‌ தங்கியிருந்தான்‌. புறப்படுவதற்கு 
முந்திய இரவில்‌ அவன்‌ ஆசைகாட்டிக்‌ கத்யூஷாவைக்‌ கற்பழித்தான்‌; மறுநாள்‌ ஒரு நூறு-ரூபிள்‌ நோட்டை வலுக்கட்‌டாயமாய்‌ அவளிடம்‌ திணித்துவிட்டு அங்கிருந்து போய்ச்‌ 
சேர்ந்தான்‌. ஐந்து மாதங்களுக்கெல்லாம்‌ கத்யூஷாவுக்கு தான்‌ கர்ப்பவதி என்பது சந்தேகத்துக்கு இடமின்றித்‌ தெரிய வந்தது. அதன்‌ பின்‌ யாவும்‌ அவளுக்கு வெறுக்கத்‌ தக்கனவாயின. வேறு எதைப்‌ பற்றியும்‌ சிந்திக்க முடியாதவளாய்‌ எந்நேரமும்‌ அவள்‌, தனக்கு ஏற்படவிருந்த மானக்கேட்டிலிருந்து 
எப்படித்‌ தப்புவதென்று நினைத்து மனம்‌ வெதும்பினாள்‌. சீமாட்டியருக்குப்‌ பணி புரிவதில்‌ நாட்டமின்றிக்‌ கவனக்‌ குறைவாய்‌ வேலை செய்தாள்‌. அது எப்படி நடைபெற்றதென அவளுக்கே தெரியாது, ஒரு நாள்‌ திடுமென அவள்‌ பொறுமையிழந்து, சீமாட்டியரிடம்‌ மரியாகையில்லாமல்‌ துடுக்குத்‌தனமாகப்‌ பேசினாள்‌, தன்னை வேலையிலிருந்து நீக்கி விடுமாறு சொன்னாள்‌.பிற்காலத்தில்‌ இதற்காக அவள்‌ மனம்‌ நொந்து 
கொள்ள வேண்டியிருந்தது. தம்‌ மனத்துக்குப்‌ பிடிக்காதவளாகி விட்ட அவளைச்‌ சீமாட்டியர்‌ விலகச்‌ செல்லும்படி விட்டு விட்டனர்‌. போலீஸ்‌ அதிகாரி ஒருவரின்‌ வீட்டில்‌ வேலைக்காரியாக அவள்‌ வேலை 
தேடிக்‌ கொண்டாள்‌. ஆனால்‌ அங்கே அவளால்‌ மூன்று மாதங்‌களுக்கு மேல்‌ இருக்க முடியவில்லை. ஏனென்றால்‌ அந்த அதிகாரி-அவருக்கு ஐம்பது வயது இருக்கும்‌. ஓயாமல்‌ அவளைத்‌ தொல்லை செய்ய முற்பட்டார்‌. ஒரு நாள்‌ அவர்‌ அளவு மீறி ஊக்கம்‌ மிக்கவராகியதும்‌ அவள்‌ சீற்றங்‌ கொண்டு முட்டாளென்றும்‌, கிழட்டுச்‌ சனியனென்றும்‌ ஏசி அவரைப்‌பிடித்துத்‌ தன்னிடமிருந்து தள்ளினாள்‌, போலீஸ்‌ அதிகாரி தடாரெனக்‌ கீழே விழுந்தார்‌. மரியாதைக்‌ குறைவாக நடந்து கொண்டாளென்று அங்கிருந்து அவள்‌ வெளியேற்றப்பட்டாள்‌. 
பேறுக்‌ காலம்‌ நெருங்கி வந்து விட்டதால்‌ அவள்‌ வேறு எங்‌கும்‌ வேலை தேடிக்‌ கொள்ள முடியவில்லை, கிராம மருத்துவச்சியும்‌ சாராயம்‌ விற்பவளுமான ஒரு கிழவியிடம்‌ சென்று அவள்‌ வீட்டில்‌ தங்கினாள்‌. பிள்ளைப்பேறு நல்லபடியாகவே 
நடந்தேறியது, ஆனால்‌, கிராமத்தில்‌ பேறு காலக்‌ காய்ச்சல்‌ கண்டிருந்த வேறொரு பெண்ணுக்கு மருத்துவம்‌ பார்த்து வந்த கிழவியின்‌ மூலம்‌ கத்யூஷாவுக்குத்‌ தொத்து பரவி விட்‌டது. அவளுக்குப்‌ பிறந்த ஆண்‌ குழந்தையை அனாதைப்‌ பிள்ளை இல்லத்துக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. அங்கே 
கொண்டுபோய்ச்‌ சேர்த்தவுடனே குழந்தை இறந்து விட்டதென்று அதை எடுத்துச்‌ சென்ற கிழவி தகவல்‌ சொன்னாள்‌. கிழவியின்‌ வீட்டுக்கு வந்த போது கத்யூஷாவிடம்‌ 
இருந்த பணம்‌ நூற்று இருபத்தேழு ரூபிள்‌. இருபத்தேழு ரூபிள்‌ அவள்‌ சம்பாதித்தது, நூறு ரூபிள்‌ முன்பு அவளைக்‌ கற்பழித்தவன்‌ கொடுத்தது. இங்கிருந்து சென்ற போது அவளிடம்‌ இருந்தது ஆறே ஆறு ரூபிள்தான்‌. பணத்தைப்‌ 
பத்திரப்படுத்தி வைத்துக்‌ கொள்ளக்‌ தெரியாதவள்‌ அவள்‌. 
கண்டபடி தனக்காகவும்‌ செலவிட்டாள்‌, கேட்டவர்களுக்கும்‌ இல்லை என்னாது கொடுத்தாள்‌. இரண்டு மாதம்‌ தங்கியிருந்ததற்காகவும்‌ சாப்பிட்டதற்காகவும்‌- தேநீரும்‌ அடங்கலாய்‌ கிழவிக்கு அவள்‌ நாற்பது ரூபிள்‌ செலுத்த வேண்டியிருந்தது; குழந்தையைக்‌ கொண்டுபோய்ச்‌ சேர்ப்பதற்காக இருபத்தைந்து ரூபிள்‌ கொடுத்தாள்‌; பிறகு ஒரு பசுமாடு வாங்கிக்‌ கொள்வதற்காகக்‌ கிழவிக்கு நாற்பது ரூபிள்‌ கடன்‌ தந்தாள்‌. துணிமணிகளென்றும்‌ தின்பண்டங்களென்‌றும்‌ இருபது ரூபிகளைத்‌ தீர்த்துக்‌ கட்டினாள்‌. ஆகவே உடல்‌ நலமடைந்ததும்‌ கையில்‌ பணமில்லாமல்‌ உடனே அவள்‌ வேலை தேடிச்‌ செல்ல வேண்டியதாயிற்று. வனத்‌துறை 
அலுவலர்‌ வீட்டில்‌ அவளுக்கு வேலை கிடைத்தது. அந்த ஆள்‌
மணமானவர்தான்‌. அப்படியும்‌ அவர்‌ முன்பு அந்தப்‌ போலீஸ்‌ அதிகாரி செய்தது போலவே முதல்‌ நாள்‌ முதற்‌ கொண்டே அவளை ஓயாது தொல்லை செய்து வந்தார்‌. கத்யூஷா அந்த ஆளிட்ம்‌ அருவருப்பு கொண்டு அவரிடமிருந்து விலகித்‌ 
தொலைவில்‌ இருக்க முயன்றாள்‌. ஆனால்‌ அந்த ஆள்‌ அனுபவம்‌ வாய்ந்தவர்‌, தந்திரம்‌ தெரிந்தவர்‌. இன்னும்‌ முக்கியமாய்‌, அவர்‌ அவளது எசமானர்‌, தம்‌ விருப்பம்‌ போல்‌ அவளை எங்கு வேண்டுமானாலும்‌ அனுப்பி வேலை வாங்க அதிகாரம்‌ 
படைத்தவர்‌. காத்திருந்து தக்க தருணமாகப்‌ பார்த்து 
அவளைச்‌ சிக்க வைத்துப்‌ பலவந்தம்‌ புரிவதில்‌ அவர்‌ வெற்றி 
பெற்றார்‌. மனைவிக்கு விவரம்‌ தெரியலாயிற்று.ஒரு நாள்‌ அறையினுள்‌ கணவர்‌ தனியே கத்யூஷாவுடன்‌ இருக்கையில்‌ அவள்‌ 
ஓடி வந்து பிடித்துக்‌ கொண்டு, ஆத்திரமாய்க்‌ கத்யூஷாவை 
அடிக்க முற்பட்டாள்‌. கத்யூஷா தற்காத்துக்‌ கொண்டாள்‌, 
சண்டை நடை.பெற்றது. விளைவு என்னவென்றால்‌, சம்பளம்‌ 
தரப்படாமல்‌ கத்யூஷா அந்த வீட்டிலிருந்து விரட்டப்பட்‌டாள்‌. அங்கிருந்து அவள்‌ நகரத்திலிருந்த தனது அத்தையிடம்‌ சென்றாள்‌. அத்தையின்‌ கணவர்‌ புத்தக ஏடுகட்டும்‌ தொழில்‌ நடத்தி முன்பு வசதியாக வாழ்ந்து வந்தவர்‌.ஆனால்‌ 
பிற்பாடு வாடிக்கைக்காரர்கள்‌ எல்லாரையும்‌ இழந்து குடிகாரராகிக்‌ கைக்குக்‌ கிடைத்தவை யாவற்றையும்‌ குடிக்காக செலவிட்டு ஒழித்தவர்‌. அத்தை ஒரு சிறிய சலவைச்சாலை நடத்தி அதைக்‌ 
கொண்டு தன்‌ குழந்தைகளையும்‌ பராமரித்துக்‌ கொண்டு தனது உதவாக்கரை கணவருக்கும்‌சாப்பாடு போட்டு வந்தாள்‌. இந்த அத்தை மாஸ்லவாவுக்குச்‌ சலவைக்காரியாக 
வேலை தருவதாகச்‌ சொன்னாள்‌. ஆனால்‌ அத்தையிடம்‌ வேலை 
செய்த சலவைக்காரிகளது மெத்தக்‌ கடினமான வாழ்க்கையைக்‌ கண்ணுற்ற கத்யூஷா இவ்வேலையை ஏற்க விருப்பமின்றி, வேலை அலுவலகத்துக்குச்‌ சென்று பதிவு செய்து கொண்டாள்‌. உயர்நிலைப்‌பள்ளி மாணவர்களாகிய இருபுதல்வர்களைக்‌ கொண்ட ஒரு சீமாட்டியிடம்‌ முடிவில்‌ அவளுக்கு வேலை தேடித்‌ தரப்பட்டது. இங்கு அவள்‌ வேலைக்குச்‌ சென்று ஒரு வாரத்துக்கெல்லாம்‌, மூத்த புதல்வன்‌-மீசை முளைத்துப்‌ பெரியவனாக இருந்தவன்‌, ஆறாவது படிவத்தில்‌
படித்து வத்தவன்‌--படிப்பை விட்டொழித்து விட்டு, கணப்‌பொழுதும்‌ அவளுக்கு நிம்மதியில்லாதபடி எந்நேரமும்‌ அவள்‌ பின்னால்‌ சுற்றினான்‌. அவனது தாயாகிய அந்தச்‌ சீமாட்டி, 
யாவற்றுக்கும்‌ மாஸ்லவாதான்‌ காரணமெனப்‌ பழி சுமத்தி 
அவளை வேலையிலிருந்து விலக்கினாள்‌. வேறு வேலை கிடைக்‌ 
காமல்‌ அலைந்து கொண்டிருந்த மாஸ்லவா மீண்டும்‌ வேலை 
அலுவலகத்துக்குச்‌ சென்றாள்‌. அங்கே நுழைந்ததும்‌ அவள்‌ 
ஒரு சீமாட்டியைச்‌ சந்தித்தாள்‌. கையுறையில்லாத குண்டுக்‌ 
கைகளில்‌ வளையல்களும்‌ விரல்களில்‌ மோதிரங்களும்‌ போட்‌டிருந்தாள்‌ அந்தச்‌ சீமாட்டி. மாஸ்லவா வேலை தேடி அலைகிறாள்‌ என்பது தெரிந்ததும்‌ அந்தச்‌ சீமாட்டி தனது முகவரியைத்‌ தந்து, தன்னை வந்து பார்க்கும்படி அவளிடம்‌ சொன்‌னாள்‌. மாஸ்லவா அங்கே சென்றதும்‌, சீமாட்டி அன்புடன்‌ அவளை வரவேற்றுக்‌ கேக்கும்‌ இனிப்பு ஓயினும்‌ தந்து உபசரித்தாள்‌, உடனே ஒரு குறிப்பு எழுதித்‌ தனது வேலைக்காரியிடம்‌ கொடுத்து அவளை எங்கோ அனுப்பினாள்‌. அந்திப்‌ பொழுதில்‌ நீளமான நரைமுடிகளும்‌ நரைத்த தாடியும்‌ 
கொண்ட நெட்டையான ஒருவர்‌ அவள்‌ இருந்த அறைக்குள்‌ 
வந்தார்‌. வந்ததும்‌ அந்தக்‌ கிழவர்‌ மாஸ்லவாவுக்குப்‌ பக்கத்‌தில்‌ அமர்ந்து கொண்டார்‌, கண்கள்‌ பளிச்சிட அவளைப்‌ பார்த்துப்‌ புன்னகை புரியவும்‌ வேடிக்கையாய்‌ அவளுடன்‌ பேசவும்‌ ஆரம்பித்தார்‌. வீட்டுக்காரி அவரைப்‌ பக்கத்து 
அறைக்கு வருமாறு கூப்பிட்டாள்‌; அங்கே அவரிடம்‌ அவள்‌ 
“கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள்‌, புத்தம்‌ புதியவள்‌”
என்று சொல்லியது மாஸ்லவாவின்‌ காதில்‌ விழுந்தது. பிறகு 
அவள்‌ மாஸ்லவாவைத்‌ தனியே அழைத்துச்‌ சென்று அவளிடம்‌ கூறினாள்‌ "இவர்‌ ஓர்‌ எழுத்தாளர்‌. நிறைய பணம்‌ வைத்திருக்கிறார்‌. நீ இவருக்குப்‌ பிடித்தமானவள்‌ ஆகி விட்‌டால்‌ எவ்வளவு வேண்டுமானாலும்‌ உனக்குத்‌ தருவார்‌.” அவள்‌ அவருக்குப்‌ பிடித்தமானவளாகவே இருந்தாள்‌. எழுத்‌தாளர்‌ அவளுக்கு இருபத்தைந்து ரூபிள்‌ தந்தார்‌, அடிக்கடி அவளைச்‌ சந்திப்பதாக வாக்களித்தார்‌. இந்தப்‌ பணம்‌ விரைவில்‌ கரைந்து போயிற்று, அத்தைக்குக்‌ தர வேண்டிய தொகையைத்‌ தந்தபின்‌ எஞ்சியிருந்தகைச்‌ செலவிட்டு ஆடையும்‌ தொப்பியும்‌ ரிப்பன்களும்‌ வாங்கிக்‌ கொண்டாள்‌. சில நாட்‌களுக்குப்‌ பிற்பாடு அந்த எழுத்தாளர்‌ அவளைக்‌ கூப்பிட்டு
அனுப்பினார்‌. அவள்‌ புறப்பட்டுச்‌ சென்றாள்‌. அவர்‌ திரும்பவும்‌ இருபத்தைந்து ரூபிள்‌ தந்ததோடு, அவளுக்குத்‌ தனியே ஒரு குடித்தனப்‌ பகுதி பிடித்துத்‌ தருவதாகக்‌ கூறினார்‌. அந்த எழுத்தாளர்‌ அவளுக்காக வாடகைக்கு எடுத்துத்‌ 
தந்த குடித்தனப்‌ பகுதியில்‌ அவள்‌ வசித்து வந்த போது, அதே வீட்டில்‌ இன்னொரு பகுதியில்‌ தங்கியிருந்த குதூகலமான விற்பனையாளன்‌ மீது காதல்‌ கொண்டு விட்டாள்‌. 
அவளே இதனை அந்த எழுத்தாளருக்கு அறிவித்தாள்‌, சிறியதாய்த்‌ தனக்கு வேறொரு குடித்தனப்‌ பகுதியை வாடகைக்கு 
எடுத்துக்‌ கொண்டு அங்கே சென்று வசிக்கலானாள்‌. ஆனால்‌ 
அவளை மணந்து கொள்வதாக வாக்களித்திருந்த அந்த விற்‌பனையாளன்‌ அவளிடம்‌ சொல்லிக்‌ கொள்ளாமலே ஒரு நாள்‌ 
நீழ்னி நோவ்கரதுக்குச்‌ சென்று விட்டான்‌, அவளைத்‌ தொலைத்‌துத்‌ தலைமுழுகி விட்டான்‌ என்பது தெரிந்தது. மாஸ்லவா தனியே இருந்து வந்தாள்‌, அந்தக்‌ குடித்தனப்‌ பகுதியில்‌ தனியாகவே தொடர்ந்து இருந்து விடலாமென நினைத்தாள்‌, 
ஆனால்‌ அதற்கு அவள்‌ அனுமதிக்கப்படவில்லை. அம்மாதிரி 
வாழ்வதற்கு அவள்‌ மஞ்சள்‌ சீட்டு*(விபசாரிகளுக்குக்‌ கொடுக்கப்பட்ட அனுமதிச்‌ சீட்டு)பெற்றுக்‌ கொண்டாக வேண்டும்‌, அவ்வப்போது மருத்துவச்‌ சோதனைக்குப்‌ போய்‌ வர வேண்டும்‌ என்று போலீசார்‌ அவளிடம்‌ கூறினர்‌. இதன்‌ பிறகு அவள்‌ தன்‌ அத்தை வீட்டுக்குக்‌ திரும்பிச்‌ சென்றாள்‌. 
அவளது நாகரிகமான ஆடைகளையும்‌ தொப்பியையும்‌ மேலங்‌கியையும்‌ கண்ணுற்ற அவள்‌ அத்தை பணிவன்புடன்‌ அவளை 
வரவேற்றாள்‌. வாழ்க்கையில்‌ மாஸ்லவா மேற்படிக்கு உயர்ந்து 
விட்டாளென நினைத்த அவள்‌ அத்தை, முன்பு சொன்னதுபோல்‌ இப்போது அவளைச்‌ சலவைக்காரியாக வேலைக்கு 
அமர்த்திக்‌ கொள்வதாகச்‌ சொல்லத்‌ துணியவில்லை. மாஸ்‌லவாவுக்குங்கூட, சலவைக்காரியாக வேலை செய்யலாமா, வேண்டாமா என்பது முன்பு போல்‌ இப்போது சிந்திக்க 
வேண்டிய ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. கடும்‌ உழைப்‌பில்‌ ஈடுபட்டிருந்த அந்தச்‌ சலவைக்காரிகளது வாழ்க்கையை 
அவள்‌ பரிதாபத்துக்குரியதாகக்‌ கருதினாள்‌. அவர்களது கரங்‌கள்‌ குச்சியாய்‌ மெலிந்து வெள்ளை வெளேரென இருந்தன.
சகிக்க முடியாதபடி வெப்பமாயிருந்த முன்னறையில்‌ சலவை
செய்து கொண்டும்‌ இஸ்திரி போட்டுக்‌ கொண்டும்‌ நின்ற 
அவர்களில்‌ சிலர்‌ ஏற்கெனவே எலும்புருக்கி நோயால்‌ பீடிக்‌கப்பட்டிருந்தார்கள்‌, சோப்பு நுரை கலந்த ஆவி அறையினுள்‌ 
நிரம்பியிருந்தது, குளிர்‌ காலமாயினும்‌ கோடையாயினும்‌ 
சன்னல்கள்‌ திறந்தே இருந்தன. நரக வேதனையான இந்த வேலையில்‌ முன்பு தான்‌ சேரலாமா என்று ஆலோசித்ததை நினைத்ததும்‌ அவளுக்குப்‌ பகீரென்றது. 
கையில்‌ காசில்லாமல்‌, காப்பாளர்‌ யாரும்‌ கிடைக்காமல்‌ மாஸ்லவா மிகவும்‌ இக்கட்டான நிலையில்‌ இருந்து வந்த இந்தக்‌ காலத்தில்தான்‌ வேசி விடுதிகளுக்கு வேண்டிய 
பெண்களைத்‌ கேடிக்‌ கொடுத்த தரகுக்காரி ஒருத்தியுடன்‌ 
அவள்‌ பரிச்சயம்‌ பெறலானாள்‌. 
புகைபிடிக்கும்‌ பழக்கம்‌ நெடுநாட்களாகசவே மாஸ்லவாவுக்கு உண்டு. இப்போது சிறிது காலமாய்‌--அந்த விற்பனையாளனுடன்‌ அவள்‌ உறவு கொண்டிருந்த போதும்‌, 
இன்னும்‌ முக்கியமாய்‌ அவன்‌ அவளைக்‌ துறந்துவிட்டு ஓடிய 
பிற்பாடும்‌- அவளுக்குக்‌ குடிப்‌ பழக்கமும்‌ ஏற்பட்டு வந்தது. 
மதுவில்‌ இருக்கக்‌ கண்ட இன்சுவையால்‌ அவ்வளவாக அவள்‌ 
கவரப்பட்டு விடவில்லை. தன்னை வருத்திய துன்பங்களை எல்‌லாம்‌ குடியின்‌ போதையைக்‌ கொண்டு மறக்கடிக்க முடிந்‌தது என்பதால்தான்‌ குடியில்‌ அப்படி அவள்‌ மோகங்‌ 
கொண்டு வந்தாள்‌.குடித்ததும்‌ கட்டுகள்‌ அறுந்து அவளுக்குத்‌ 
தெம்பு பிறந்தது, தன்மதிப்பும்‌ தன்னம்பிக்கையும்‌ உண்‌டாயின. குடிபோதை இல்லாத போது அவளுக்கு இந்தத்‌ தெம்பும்‌ மதிப்புணர்ச்சியும்‌ இல்லாமல்‌, எந்தநேரமும்‌ துயரத்‌ 
தாலும்‌ வெட்க உணர்ச்சியாலும்‌ வதைக்கப்பட்டாள்‌. 
அந்த தரகுக்காரி மாஸ்லவாவின்‌ அத்தைக்குப்‌ பலவும்‌ வாங்கி வந்து உபசரித்தாள்‌, மாஸ்லவாவுக்கு மது 
வாங்கித்‌ தந்து குடிக்கச்‌ சொன்னாள்‌. நகரிலுள்ள மிகச்‌ சிறந்த விடுதி ஒன்றில்‌ மாஸ்லவாவைச்‌ சேர்ப்பதாகக்‌ கூறினாள்‌. அதில்‌ சேர்ந்து கொள்வதிலுள்ள அனுகூலங்களையும்‌ 
வசதிகளையும்‌ எடுத்துரைத்துப்‌ புகழ்ந்து பேசினாள்‌. இரண்டு 
வழிகளில்‌ ஒன்றை மாஸ்லவா தேர்ந்தெடுத்துக்‌ கொள்ள 
வேண்டியிருந்தது. கேவலமான வேலைக்காரியாக வேலைக்குச்‌ 
சென்று ஆடவர்களது தொல்லையிலிருந்து தப்பமுடியாமல்‌, கள்ளத்‌தனமாய்‌ எப்போதாவது விபசாரத்தில்‌ ஈடுபடும்‌படி நேர்வது ஒரு வழி; சட்டப்படி அங்கீகாரம்‌ பெற்றும்‌, பாதுகாப்பான நிலையில்‌ நல்ல ஊதியத்துக்குரிய பகிரங்கமான விபசாரத்தில்‌ நிரந்தரமாக ஈடுபடுவது இரண்டாவது வழி. பிந்திய வழியைத்‌ தேர்ந்தெடுத்துக்‌ கொள்வதென 
அவள்‌ முடிவு செய்தாள்‌. தவிரவும்‌, தன்னைக்‌ கற்பழித்தவன்‌ மீதும்‌, அந்த விற்பனையாளன்‌ மீதும்‌, மற்றும்‌ தனக்குத்‌ தீங்கிழைத்தவர்கள்‌ எல்லார்‌ மீதும்‌ வஞ்சம்‌ தீர்த்துக்‌ 
கொள்ள இதுவே சரியான வழியாக அவளுக்குத்‌ தோன்றியது. அவளை மயங்க வைத்து இம்முடிவுக்கு வரச்‌ செய்தஇறுதியான இன்னொரு விவரம்‌ என்னவெனில்‌, அவளுக்கு 
விருப்பமான ஆடைகளை எல்லாம்‌--வெல்வெட்டு, பட்டு, சாட்டின்‌ ஆடைகளையும்‌ தோளும்‌ கரமும்‌ வெளியே தெரியும்படிக்‌ கழுத்துத்‌ தணிவான நடன உடைகளையும்‌ 
வாங்கிக்‌ கொள்ள முடியுமென அந்தக்‌ தரகுக்காரி அவளிடம்‌ 
சொன்னாள்‌. தகதகக்கும்‌ மஞ்சள்‌ பட்டாலானது, ஓரங்களில்‌ கறுப்பு வெல்வெட்டு ஒப்பனை செய்யப்பட்டது. இப்படி ஓர்‌ ஆடையில்‌, அதுவும்‌ கழுத்துத்‌ தணிவானதில்‌, தன்னை அவள்‌ 
கற்பனை செய்து பார்த்தாள்‌. அவ்வளவுதான்‌, அதற்கு மேல்‌ 
எதிர்த்து நிற்க முடியாமல்‌ தரகுக்காரியிடம்‌ தனது அடையாளப்‌ பதிவுச்‌ சீட்டைத் தந்து விட்டாள்‌. தரகுக்காரி அன்று மாலையே வாடகை வண்டியில்‌ அவளை அழைத்துச்‌ சென்று, 
பேர்போன கித்தாயெவா விடுதிக்குக்‌ கொண்டுபோய்ச்‌ சேர்த்தாள்‌. 
அது முதல்‌, தெய்வத்துக்கும்‌ மனிதனுக்கும்‌ அடுக்காத 
பாபச்‌ செயல்களை நித்திய கர்மமாகக்‌ கொண்ட ஒரு வாழ்க்கை மாஸ்லவாவுக்கு ஆரம்பமாகியது. குடிமக்களது நல்வாழ்வில்‌ கருத்துக்‌ கொண்ட அரசாங்கத்தின்‌ அனுமதியோடு மட்டுமன்றி அதன்‌ முழு ஆதரவோடும்‌ நடைபெற்று 
வரும்‌ அந்த வாழ்க்கையில்‌ நூற்றுக்‌ கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலுமான பெண்கள்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌. பத்தில்‌ ஒன்பது பெண்களுக்குக்‌ கொடிய நோயிலும்‌ அகால முதுமை 
யிலும்‌ மரணத்திலும்‌ முடிவடையும்‌ வாழ்க்கை அது. இரவின்‌ அவலக்‌ கூத்துகளுக்குப்‌ பிற்பாடு காலையும்‌ 
பெரும்‌ பகுதி பகற்‌ பொழுதும்‌ ஆழ்ந்த உறக்கத்தில்‌ கழிகின்‌றன. பிற்பகல்‌ மூன்று அல்லது நான்கு மணிக்கு அழுக்குப்‌ படுக்கையிலிருந்து சோர்ந்து மயங்கிய நிலையில்‌ பள்ளியெழுச்சி நடைபெறுகிறது. மயக்கம்‌ தெளிவதற்காக ஒரு 
சோடா, அதைக்‌ தொடர்ந்து காப்பி. பிறகு தொளதொளப்‌பான உள்ளாடையின்‌ மீது அங்கியையோ மேலாடையையோ மாட்டிக்‌ கொண்டு வேலையின்றி அறை அறையாக அங்குமிங்கும்‌ திரிகிறார்கள்‌, இழுத்து மூடிய சன்னல்‌ திரைச்‌ 
சீலைக்கு அப்பால்‌ வெளிய பார்த்துக்‌ கொண்டு நிற்கிறார்‌கள்‌. எஞ்சிய பகற்‌ பொழுது இப்படிக்‌ கழிந்தபின்‌, முகம்‌ கழுவிச்‌ சாந்து பூசுதல்‌, வாசனை தடவி உடலுக்கும்‌ தலைமுடிக்‌கும்‌ மணமூட்டுதல்‌, ஆடைகளை அணிந்து பார்த்துத்‌ தேர்வு செய்தல்‌, அதனுடன்‌ கூடவே அவை குறித்து விடுதியின்‌ 
தலைவியுடன்‌ சண்டை பிடித்தல்‌, நிலைக்‌ கண்ணாடியின்‌ முன்‌னால்‌ நின்று அழகு பார்த்தல்‌, முகத்துக்கு வண்ணமும்‌ புருவத்‌துக்கு மையும்‌ இடுதல்‌. இவை எல்லாம்‌ முடிந்ததும்‌ கொழுப்‌பும்‌ இனிப்பும்‌ மிகுந்த சாப்பாடு. பிறகு உடம்பின்‌ ஒரு பகுதி 
அம்மணமாய்‌ வெளியே தெரிய, எஞ்சிய பகுதி பளபளப்‌பான வண்ணப்‌ பட்டாடையில்‌ மினுக்க, விளக்கொளியும்‌ அலங்காரங்களும்‌ கண்ணைப்‌ பறிக்கும்‌ முன்மண்டபத்துக்குச்‌ 
செல்கிறார்கள்‌, விருந்தினர்கள்‌ வருகிறார்கள்‌. பிறகு இசை, 
நடனம்‌, மிட்டாய்‌, மது பானம்‌, புகைபிடித்தல்‌, விபசாரம்‌ 
வேண்டுவோர்‌ எவருக்கும்‌ இல்லையெனாது விலை போதல்‌,
இளைஞர்கள்‌, நடுத்தர வயதினார்‌, தள்ளாத கிழவர்கள்‌, மணமானோர்‌, மணமாகாதோர்‌, வணிகர்கள்‌, விற்பனையாளர்கள்‌; ஆர்மீனியர்கள்‌, யூதர்கள் , தாத்தாரியார்கள்‌; செல்வந்தர்‌கள்‌, ஏழைகள்‌; ஆரோக்கியமானவர்கள்‌, நோய்‌வாய்ப்பட்‌டோர்‌; குடிபோதை தலைக்கேறியவர்கள்‌, நிதான நிலையில்‌ இருப்போர்‌; முரடர்கள்‌, இளகிய மனத்தினர்‌; இராணுவத்‌தினர்‌, குடிமைத்துறையோர்‌; மாணவர்கள்‌, பள்ளிக்கூடப்‌ பையன்கள்‌- இப்படிச்‌ சாத்தியமான எல்லா வயதினரோடும்‌, 
வகுப்பாரோடும்‌, இயல்பினரோடும்‌ கூடிக்‌ கலத்தல்‌. 
கூச்சலும்‌ கேலியும்‌, இசையும்‌ இழுபறியும்‌, புகையும்‌ மதுவும்‌. அந்தி முதல்‌ விடியற்‌ காலை வரை ஓய்ச்சல்‌ ஓழிச்சலின்‌றி இசை. பொழுது விடிந்த பிறகுதான்‌ விடுதலை, அதன்‌ பின்‌ ஆழ்ந்த உறக்கம்‌. நாள்‌தோறும்‌, வாரம்‌ முழுதும்‌ இதே அவலம்தான்‌. பிறகு, வாரத்தின்‌ இறுதியில்‌ அரசாங்க நிலையத்துக்குச்‌ செல்ல வேண்டும்‌; அங்கே மருத்துவர்கள்‌--அரசாங்க ஊழியர்களான ஆடவர்கள்‌ புரிந்திடும்‌ மருத்துவச்‌ சோதனைக்கு உட்பட வேண்டும்‌. சில நேரம்‌ காரிய முனைப்‌போடு கண்டிப்பாகவும்‌, சில நேரம்‌ வேடிக்கையும்‌ விளையாட்டுமாகவும்‌ அவர்கள்‌ இந்தச்‌ சோதனையை நடத்துகிறார்‌கள்‌. மாந்தரும்‌ விலங்கினங்களும்‌ தமது சாத்தான்‌ இயல்புகளிலிருந்து தம்மைக்‌ தற்காத்துக்‌ கொள்ளும்‌ பொருட்டு, 
இயற்கையால்‌ அருளப்பட்டிருக்கும்‌ ௮ந்த நாணத்தையும்‌ மான உணர்ச்சியையும்‌ கெட்டொழியச்‌ செய்கிறார்கள்‌. இந்தப்‌ 
பெண்களை இப்படி அவர்கள்‌ சோதனை செய்து முடித்த 
பின்‌, அனுமதி எழுதித்‌ தருகிறார்கள்‌. வாரம்‌ முழுதும்‌ இப்பெண்களும்‌ இவர்களது உடந்தையாளர்களும்‌ புரிந்து வந்திருக்கும்‌ பாபச்‌ செயலைகளைத்‌ தொடர்ந்து நடத்தச்‌ 
செல்வதற்கான அனுமதி அது. இவ்வாறு வாராவாரம்‌ இந்த 
வாழ்க்கை தொடர்கிறது; கோடையாயினும்‌ குளிர்‌ காலமாயினும்‌, வேலை நாட்களாயினும்‌ விடுமுறை நாட்களாயினும்‌, மாற்றமின்றி நாள்‌ தவறாமல்‌ இதே போல நடைபெறுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு மாஸ்லவா இந்த வாழ்க்கையில்‌ 
ஈடுபட்டிருந்தாள்‌. இந்த ஏழாண்டுகளில்‌ அவள்‌ இரண்டு 
தரம்‌ விடுதி மாறிச்‌ சென்றாள்‌, ஒரு தரம்‌ மருத்துமனையில்‌ 
சேர்ந்து சிகிச்சை பெற்றுக்‌ கொண்டாள்‌. ஏழாவது ஆண்‌டின்‌போது, அவளது முதலாவது பாபுச்‌ செயலிலிருந்து 
கணக்கிடுவோமாயின்‌ எட்டாவது ஆண்டின்‌ போது. அவளுடைய இருபத்து ஆறாவது வயதில்‌ நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக, அவள்‌ கைது செய்யப்பட்டுச்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டாள்‌. சிறைக்கூடத்தில்‌ திருடர்களோடும்‌ 
கொலைகாரார்களோடும்‌ ஆறு மாதங்கள்‌ இருந்தபின்‌, இப்‌போது அவளை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச்‌ சென்றார்கள்‌. 
-----------
                               3 
காவலாட்கள்‌ இருவரும்‌ உடன்வர மாஸ்லவா நெடுந்‌தொலைவு நடந்து களைத்துப்‌ போய்‌, நீதிமன்றக்‌ கட்டிடத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தாள்‌. முன்பு அவளை வளர்த்‌தெடுத்த சீமாட்டியரின்‌ மருமகனும்‌, அவளைக்‌ கற்பழித்த 
ஆளுமாகிய கோமகன்‌ திமீத்ரி இவானவிச்‌ நெஹ்லூதவ்‌, 
அந்த நேரத்தில்‌ அவரது உயரமான கட்டிலில்‌ சுருள்வில்‌ படுக்கையின்‌ மெல்லிறகு மெத்தையிலே படுத்திருந்தார்‌. அப்பழுக்கின்றிச்‌ சலவை செய்து பெட்டி போடப்பட்ட 
அவரது இராக்கால விசிறிமடிப்புச்‌ சட்டை, கழுத்துப்‌ பொத்‌தான்‌ போடப்படாமல்‌ திறந்திருந்தது. அவர்‌ சிகரெட்டுப்‌ புகையை விட்டுக்‌ கொண்டு எதிரே எங்கோ உற்று நோக்கியவாறு, உடனடியாகத்‌ தாம்‌ செய்ய வேண்டியிருந்த காரியங்‌களையும்‌ முந்திய மாலையின்‌ நிகழ்ச்சிகளையும்‌ பற்றிய சிந்தனையில்‌ ஆழ்ந்திருந்தார்‌. முந்திய மாலைப்‌ பொழுதில்‌ அவர்‌ செல்வச்‌ செழிப்பும்‌ 
சிறப்பும்‌ வாய்ந்த கர்ச்சாகின்‌ குடும்பத்தாரின்‌ வீட்டுக்குச்‌ 
சென்றிருந்ததையும்‌, அவர்களது மகளையே அவர்‌ மணந்து 
கொள்ளப்‌ போவதாக அங்கே எல்லாரும்‌ எதிர்பார்த்து வந்ததையும்‌ நினைத்துப்‌ பெருமூச்சு விட்டுக்‌ கொண்டார்‌. தீர்ந்துபோன சிகரெட்டைப்‌ போட்டுவிட்டு வெள்ளிப்‌ பேழையிலிருந்து இன்னொன்றை எடுக்கப்‌ போனவர்‌, வேண்டாமென 
முடிவு செய்து மழமழப்பான வெண்ணிறக்‌ கால்களைக்‌ கீழே 
வைத்து மிதியடிகளுக்குள்‌ பாதங்களை துழைத்துக்‌ கொண்‌டார்‌, பட்டு மேலங்கியை எடுத்துப்‌ பருத்த தோள்களில்‌ இழுத்து மாட்டியவாறு தடதடக்க வேகமாய்‌ நடந்து ஒப்பனை 
அறைக்குள்‌ சென்றார்‌.அந்த அறையில்‌ எதிக்கலான்‌, பொமேடுகள்‌, செண்டுகள்‌ முதலானவற்றின்‌ நெடி மூக்கைக்‌ துளைத்‌தது. கனிவகை பற்பொடியால்‌ முதலில்‌ பல்‌ தேய்த்தார்‌. அவரது பற்களில்‌ பலவும்‌ தங்க அடைப்பு இடப்பட்டவை. 
வாசனை கலந்த நீரில்‌ வாய்‌ கொப்புளித்தார்‌; பிறகு காலைக்‌ 
கடன்களை முடித்துக்‌ கொண்டு வாசனை சோப்பில்‌ கைகளைக்‌ 
கழுவி, நீளமான நகங்களைக்‌ கவனமாகக்‌ தூரிகையால்‌ சுத்தம்‌ 
செய்தார்‌. சலவைக்‌ கல்லாலான கழுவுத்‌ தட்டத்தில்‌ முகத்‌தையும்‌ தடித்த கழுத்தையும்‌ கழுவினார்‌; பல விதமான துண்டுகளையும்‌ எடுத்துத்‌ துவட்டிக்‌ கொண்டார்‌. பிறகு மூன்றாவது அறைக்குள்‌ சென்றார்‌, அவருடைய பூநீர்க்‌ குளிப்புக்‌காக யாவும்‌ அங்கே தயாராயிருந்தன. குளிர்ந்த நீரில்‌ கட்டுமஸ்தான வெள்ளை உடம்பைக்‌ குளிப்பாட்டித்‌ துருக்கிப்‌ பூத்துண்டால்‌ துவட்டிய பின்‌ புதிய உள்ளுடுப்புகளை 
உடுத்திக்கொண்டார்‌.முகக்கண்ணாடி போல பளிச்சிட்ட பூட்சுகளையும்‌ போட்டுக்‌ கொண்டதும்‌, முடிவில்‌ ஒப்பனை மேசைக்கு எதிரே அமர்ந்து இரு கைகளிலும்‌ பிரஷ்களை எடுத்துக்‌ குட்டையான கரிய சுருட்டைத்‌ தாடியையும்‌, பொட்டுகளுக்கு மேல்‌ கரைய ஆரம்பித்திருந்த தலைமுடிகளையும்‌ சுத்தம்‌ செய்து ஒழுங்குபடுத்தினார்‌. 
ஒப்பனைக்கு அவர்‌ உபயோகித்தவை யாவும்‌, அவரது உள்ளுடுப்புகளும்‌ ஆடைகளும்‌ பூட்சுகளும்‌ டைகளும்‌ டைபிடிக்கைகளும்‌ குமிழ்ப்‌ பொத்தான்களும்‌ தரத்திலும்‌ விலையினும்‌ உயர்ந்தவை, நீடித்து உழைக்கக்‌ கூடியவை, பகட்‌டின்றிப்‌ பாங்காயிருந்தவை. 
அங்கிருந்த பத்துப்‌ பன்னிரண்டு டைகளிலும்‌ டை பிடிக்கைகளிலும்‌ குருட்டாம்‌ போக்கில்‌ முதலில்‌ கைக்கு 
வந்தவற்றை எடுத்துக்‌ கொண்டார்‌. முன்பொரு காலத்தில்‌ அவருக்கு இவை புத்தம்‌ புதியனவாய்‌, உள்ளம்‌ கவருவனவாய்‌ இருந்தவை. ஆனால்‌ இப்போது அவர்‌, எல்லாம்‌ ஒன்றுதானென்று நினைக்கும்படி ஆடையலங்காரத்தில்‌ நாட்டமில்‌லாதவராகி விட்டார்‌. பிரஷ்‌ செய்யப்பட்டுக்‌ தயாராய்‌ நாற்காலி மீது வைக்கப்பட்டிருந்த ஆடைகளை உடுத்திக்‌ கொண்டு, விறுவிறுப்பும்‌ உற்சாகமும்‌ அதிகம்‌ இல்லாவிட்‌ 
டாலும்‌, துப்புரவான நிலையில்‌ செண்டு கமகமக்க, நீள்சதுரச்‌ 
சாப்பாட்டு அறைக்குள்‌ சென்றார்‌. அந்த அறையின்‌ மரக்கட்‌டைத்‌ தளமிடப்பட்ட தரையை முந்திய நாளன்று மூன்று ஆட்கள்‌ வேலை செய்து மெருகேற்றி மினுமினுக்கச்‌ செய்‌திருந்தார்கள்‌. மிகப்‌ பெரிய ஓக்‌ மர அலமாரியும்‌, சிங்கப்‌ பாதங்களின்‌ வடிவில்‌ கடையப்பெற்று விரிந்தமைந்த நான்கு கால்களில்‌ அதே மரத்திலாகிய கம்பீரமான ஒரு மேசையும்‌ அங்கே இருந்தன. 
இந்த மேசையில்‌ விரிக்கப்பட்டிருந்த விரிப்பு கஞ்சியிடப்பட்டது, கூட்டெழுத்துச்‌ சின்னங்கள்‌ பின்னப்பட்டது. இதன்‌ மேல்‌ கமகமக்கும்‌ காப்பி நிறைந்த வெள்ளிக்‌ கெட்‌டிலும்‌, வெள்ளிச்‌ சக்கரைக்‌ கிண்ணமும்‌, பால்‌ வட்டாவும்‌ புது மணம்‌ குலையாத ரொட்டியும்‌ ரஸ்க்கும்‌ பிஸ்கெட்டும்‌ 
கொண்ட வட்டிலும்‌ இருந்தன. சாப்பாட்டுத்‌ தட்டுக்குப்‌ 
பக்கத்தில்‌ அன்று வந்த கடிதங்களும்‌ செய்தியேடுகளும்‌ 
Gu Revue des deux Mondes (  * கலை-இலக்கியப்‌ பொது விவகாரப்‌ பிரெஞ்சு சஞ்சிகை
7889முதல்‌ பாரிசில்‌ வெளிவந்தது, ரஷ்யப்‌ பிரபுக்‌ குலத்‌தோரிடையே பிரபலமடைந்திருந்தது)இதழும்‌ வைக்கப்பட்டிருந்தன. 
கடிதங்களில்‌ ஒன்றை எடுத்து அவர்‌ பிரிக்கப்‌ போன 
நேரத்தில்‌ நடையிலிருந்து அறைக்குள்‌ வருவதற்கான கதவைத்‌ திறந்து கொண்டு, பருத்த உருவமுடைய நடுத்தர 
வயதுள்ள ஒரு பெண்‌ நீரிலே மிதந்து வருவது போல அசங்‌காமல்‌ உள்ளே வந்தாள்‌. துக்கக்‌ குறியான கறுப்பு ஆடை அணிந்து, தலையில்‌ வகிடு எடுத்திருந்த இடம்‌ வழுக்கையாகி 
அகன்று வந்ததை மறைக்கும்‌ பொருட்டுச்‌ சித்திரப்‌ பின்னல்‌ 
குல்லாய்‌ வைத்திருந்தாள்‌. அவள்‌ பெயர்‌ ௮க்ரஃபேனா பெத்‌ரோவ்னா. முன்பு நெஹ்லூதவின்‌ தாயிடம்‌ பணிப்பெண்ணாக இருந்தவள்‌, அண்மையில்‌ இதே வீட்டில்‌ தாய்‌ இறந்தபின்‌ நெஹ்லூதவின்‌ வீட்டு மேலாளாய்‌ இங்கேயே தங்கி விட்டவள்‌. அக்ரஃபேனா பெத்ரோவ்னா அவ்வப்போது நெஹ்லூதவின்‌ தாயுடன்‌ வெளிநாடுகளுக்குச்‌ சென்று ஏறத்தாழ பத்து ஆண்டுகள்‌ தங்கியவள்‌. ஆகவே சீமாட்டிக்குரிய நடையுடை பாவனைகளை ஓரளவு பெற்றிருந்தாள்‌. பிள்ளைப்‌ பிராயம்‌ 
முதல்‌ நெஹ்லூதவ்‌ குடும்பத்தாருடன்‌ இருந்து வந்தவளாதலால்‌, மீத்தின்கா என்று செல்லமாய்‌ அழைக்கப்பட்ட சிறுபையனாக இருந்த காலம்‌ முதலாய்‌ திமீத்ரி இவானவிச்சை 
அவள்‌ நன்கு அறிந்தவள்‌. 
"வணக்கம்‌, திமீத்ரி இவானவிச்‌!”
“வணக்கம்‌, அக்ரஃபேனா பெத்ரோவ்னா! என்ன சேதி?" 
என்று வேடிக்கை தொனிக்கும்‌ குரலில்‌ கேட்டார்‌ நெஹ்லூதவ். 
"கோமகளிடமிருந்தோ, இளங்‌ கோமகளிடமிருந்தோ 
கடிதம்‌ வந்திருக்கிறது. சற்று முன்புதான்‌ பணிப்பெண்‌ 
கொண்டுவந்தாள்‌, பதிலுக்காக என்‌ அறையில்‌ காத்திருக்‌கிறாள்‌” என்று கூறி, பொருட்‌ செறிவு வாய்ந்த முறையில்‌ புன்னகை புரிந்தபடிக்‌ கடிதத்தை அவரிடம்‌ தந்தாள்‌, 
அக்ரஃபேனா பெத்ரோவ்னா. 
"சரி, இதோ வந்து விட்டேன்‌!" என்று சொல்லிக்‌ கடிதத்தை வாங்கிக்‌ கொண்ட நெஹ்லூதவ்‌, அக்ரஃபேனா 
பெத்ரோவ்னாவின்‌ புன்னகையைக்‌ கவனித்ததும்‌ முகத்தைச்‌ சுளித்துக்‌ கொண்டார்‌. இளங்‌ கோமகள்‌ கர்ச்சாகினா எழுதிய கடிதமாகவே இருக்கும்‌, இளங்‌ கோமகளை அவர்‌ மணந்து கொள்ளப்‌ போவது தனக்கும்‌ தெரியுமே என்று கூறுவது போல இருந்‌தது, அக்ரஃபேனா பெத்ரோவ்னாவின்‌ அந்தப்‌ புன்னகை. அவளது இந்த ஊகம்‌ நெஹ்லூதவுக்குப்‌ பிடிக்கவில்லை. 
*பணிப்பெண்ணைக்‌ காத்திருக்கச்‌ சொல்கிறேன்‌”'' என்று கூறி, மேசையில்‌ தக்க இடத்தை விட்டு விலகியிருந்த ரொட்டித்‌ துண்டுத்‌ துடைப்பான்‌ ஒன்றை எடுத்துச்‌ சரியான இடத்தில்‌ வைத்துவிட்டு, உள்ளே வந்த அதே முறையில்‌ 
அசங்காமல்‌ அறையிலிருந்து வெளியே போய்ச்‌ சேர்ந்தாள்‌, 
அக்ரஃபேனா பெத்ரோவ்னா. 
செண்டு இடப்பட்ட அந்தக்‌ கடிதத்தைப்‌ பிரித்து, 
சொரசொரப்பான ஓஒரங்களுடன்‌ மேசு வர்ணத்துிலான தடிக்‌ 
காதிதத்தில்‌ கொட்டை கொட்டையாக எழுப்பட்டிருந்ததைப்‌ படிக்க ஆரம்பித்தார்‌ நெஹ்லூதவ்‌
“உங்களது ஞாபக சக்தியாகச்‌ செயற்படும்‌ பொறுப்‌பினை ஏற்றுக்‌ கொண்டிருக்கும்‌ நான்‌, உங்களுக்கு நினைவுபடுத்துவது என்னவென்றால்‌, ஏப்ரல்‌ 28ஆம்‌ நாளாகிய இன்று நீங்கள்‌ சான்றாயராக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்‌ கிறீர்கள்‌, ஆகவே யோசனையின்றி வழக்கமான உங்களது மெத்தனத்துடன்‌ நேற்று இரவு நீங்கள்‌ வாக்களித்துச்‌ சென்‌றது போல்‌, கோலசவுடனும்‌ எங்களுடனும்‌ ஓவியக்‌ காட்சிக்‌ 
கூடத்துக்கு வர முடியாது உங்களால்‌--நேரத்தில்‌ ஆஜராகத்‌ தவறியதற்காக, 4 moins que vous ne soyez disposé 4 payer A la cour d’assises les 300 roubles d’amende, que vous vous refusez 
pour votre cheval (குற்ற விசாரணை நீதிமன்றத்துக்கு, நீங்கள்‌ குதிரை 
வாங்குவதற்காகச்‌ செலவிட விரும்பாத அந்த 300 ரூபிளைத்‌ 
தண்டப்பணமாகக்‌ கட்டுவதென்று) . நேற்று இரவு நீங்கள்‌ போய்ச்‌ சேர்ந்த பிறகுதான்‌ எனக்கு இது நினைவுக்கு வந்தது. ஆகவே இதை மறந்து விடாதீர்கள்‌. 
கோமகள்‌ மி. கர்ச்சாகனா.”
அந்தக்‌ காகிதத்தின்‌ பின்‌ பக்கத்தில்‌ பின்‌ குறிப்பு ஓன்று 
இருந்தது: 
*  உத்தேசம்‌ இல்லையானால்‌. 
நேற்று இரவு நீங்கள்‌ போய்ச்‌ சேர்ந்த 
பிறகுதான்‌ எனக்கு இது நினைவுக்கு வந்தது. ஆகவே இதை 
மறந்து விடாதீர்கள்‌. 
கோமகள்‌ மி. கர்ச்சாகினா.' 
அந்தக்‌ காகிதத்தின்‌ பின்‌ பக்கத்தில்‌ பின்‌ குறிப்பு ஓன்று 
இருந்தது: 
''உங்கள்‌ சாப்பாட்டுக்கு வேண்டியவை இரவில்‌ உங்‌களை எதிர்பார்த்து அப்படியே இருக்குமென அம்மா என்னை உங்களிடம்‌ சொல்லச்‌ சொல்லியிருக்கிறார்கள்‌.
மி க. "
நெஹ்லூதவுக்கு முகம்‌ கோணிவிட்டது. இளங்‌ கோமகள்‌ கர்ச்சாகினா, கண்ணுக்குப்‌ புலப்படாத இழைகளைக்‌ 
கொண்டு அவரை மேன்மேலும்‌ தன்னுடன்‌ இறுகப்‌ பிணைத்து 
முடி போடுவதற்காக இரண்டு மாதங்களாய்க்‌ கையாண்டு வந்த சாமர்த்தியமான தந்திரங்களின்‌ தொடர்ச்சியே ஆகும்‌ இந்தக்‌ கடிதம்‌. அனால்‌ இளமையைக்‌ கடந்து விட்ட ஆடவர்‌கள்‌ கடுமையாகக்‌ காதல்‌ கொண்டுவிடாகவரை, அவர்கள்‌ 
எல்லார்க்குமே பொதுவாக இருக்கக்‌ கூடிய தயக்கத்தை அன்‌னியில்‌, இதனிலும்‌ முக்கியமான இன்னொரு காரணமும்‌ நெஹ்‌லூதவை உடனடியாகத்‌ திருமணங்‌ குறித்து, அவர்‌ விரும்‌பினாலும்‌, இளங்‌ கோமகளிடம்‌ முன்மொழிய முடியாதபடித்‌ தடுத்து வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்‌ கத்யூஷாவைக்‌ கெடுத்து நிர்க்கதியான நிலையில்‌ விட்டுச்‌ சென்றார்‌ என்பதல்ல காரணம்‌. அதை அவர்‌ அறவே மறந்து விட்டார்‌ 
என்பதோடு, தமது திருமணத்துக்கு அதை ஒரு தடையாகக்‌ 
கருதியிருக்கவும்‌ மாட்டார்‌. திருமணமான ஒருத்தியுடன்‌ 
அவருக்கு ஏற்பட்டிருந்த உறவுதான்‌ காரணம்‌. அவரைப்‌ 
பொறுத்த மட்டில்‌ இந்த உறவு ஏற்கெனவே இறுதி எய்தி விட்டதாகக்‌ கருதினார்‌ என்றாலும்‌, இந்த முறிவுக்கு இன்னும்‌ அவர்‌ அந்தப்‌ பெண்ணின்‌ உடன்பாட்டைப்‌ பெற்றாகவில்லை.பெண்களிடம்‌ நெஹ்லூதவுக்குக்‌ கூச்சம்‌ அதிகம்‌. 
அவரது இந்தக்‌ கூச்சம்தான்‌ திருமணமான அந்தப்‌ பெண்‌ணைத்‌ தூண்டிவிட்டு எப்படியாவது அவரை வசப்படுத்திவிட வேண்டுமென்ற முயற்சியில்‌ இறங்கச்‌ செய்தது. தேர்தல்‌களின்‌ போது நெஹ்லூதவ்‌ வாக்குப்‌ பதிவு செய்து வந்த மாவட்டத்தில்‌ பிரபுக்‌ குல முதல்வராக இருந்தவரின்‌ மனைவி அவள்‌. நாள்‌ தோறும்‌ நெஹ்லூதவை அவள்‌ மேலும்‌ மேலும்‌ வசமாய்த்‌ தன்னிடம்‌ சிக்க வைத்து வந்தாள்‌, அதே போது 
நாள்‌ தோறும்‌ அவருக்கு இந்த உறவு மேலும்‌ மேலும்‌ விரும்பத்‌ தகாததாகி வந்தது. ஆரம்பத்தில்‌ எதிர்த்து நிற்கப்‌ போதிய வலுவின்றிச்‌ சிக்கிக்‌ கொண்டுவிட்டார்‌; பிற்பாடு, 
அவளிடம்‌ சம்மதம்‌ பெறாமல்‌ பலவந்தமாக முறித்துக்‌ 
கொண்டு விலக அவரது குற்றமுள்ள நெஞ்சம்‌ இடந்‌ தரவில்லை. எனவேதான்‌, இளங்‌ கோமகளை மணத்து கொள்வதெனத்‌ தாம்‌ முடிவுக்கு வருவதாயினும்‌ அவளிடம்‌ இதுபற்றி முன்மொழிய தமக்கு உரிமை இல்லையெனக்‌ கருதினார்‌. 
மேசை மீதிருந்த கடிதங்களில்‌ ஒன்று அந்தப்‌ பெண்‌ணின்‌ கணவர்‌ எழுதியது. அவருடைய கையெழுத்தையும்‌ அவ்வூர்‌ அஞ்சல்‌ முத்திரையையும்‌ பார்த்ததும்‌ நெஹ்லூதவுக்கு முகம்‌ சிவந்துவிட்டது. அபாய நிலைமை எதிர்பட்டதும்‌ எப்போதுமே அவருக்குச்‌ சக்தி பிறந்து விடும்‌; அதே போல இப்போதும்‌ திடுமெனச்‌ சக்தி பெற்று விறுவிறுப்படைந்தார்‌. 
ஆனால்‌ வீணில்‌ ஏற்பட்ட பரபரப்பு இது. நெஹ்லூதவின்‌ பிரதான பண்ணை அமைந்திருந்த மாவட்டத்தின்‌ பிரபுக்‌ குல முதல்வராகிய அம்மனிதர்‌ மே மாத இறுதியில்‌ ஸேம்ஸ்துவோவின்‌ (ஜார்கால ருஷ்யாவில்‌ கிராம 
மாவட்ட ஊராட்சி மன்றம்‌) சிறப்புக்‌ கூட்டம்‌ நடைபெறப்‌ போகிறதென்று 
அறிவிப்பதற்கே இந்தக்‌ கடிதத்தை எழுதியிருந்தார்‌. பள்ளிக்‌கூடங்களையும்‌ சாலைகளையும்‌ பற்றிய முக்கிய பிரச்சனைகள்‌ குறித்து விவாதிக்கப்படப்‌ போவதாகவும்‌, பிற்போக்குக்‌ கட்சியாரிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுமென எதிர்பார்க்‌ 
கப்படுவதாகவும்‌, ஆகவே நெஹ்லூதவ்‌ தவறாமல்‌ இந்தக்‌ 
கூட்டத்துக்கு வந்து விவாதங்களில்‌ donner un coup d’épaule (ஆதரவளித்து வழிமொழிதல்‌) செய்ய வேண்டுமெனக்‌ கேட்டுக்‌ கொள்வதாகவும்‌ அவர்‌ 
எழுதியிருந்தார்‌. மிதவாதப்‌ போக்கைச்‌ சேர்ந்தவரான இந்தப்‌ பிரபுக்‌ குல முதல்வர்‌ தம்முடன்‌ கருத்து உடன்பாடு கொண்ட சிலருடன்‌ சேர்ந்து கொண்டு, மூன்றாம்‌ அலெக்சாண்டரின்‌ ஆட்சி 
யில்‌ மேலோங்கியிருந்த பிற்போக்கினை எதிர்த்துப்‌ போராடி 
வந்தார்‌. பொது வாழ்வில்‌ முழுமூச்சுடன்‌ ஈடுபட்டிருந்த 
அவர்‌, இல்லற வாழ்வில்‌ தமது துர்ப்பாக்கியம்‌ குறித்து 
ஏதும்‌ அறியாதவராய்‌ இருந்தார்‌. 
இம்மனிதர்‌ சம்பந்தமாகத்‌ தாம்‌ அனுபவிக்க நேர்ந்த வேதனை வாய்ந்த தருணங்கள்‌ எல்லாம்‌ நெஹ்லூதவின்‌ நினைவுக்கு வந்தன. ஒரு நாள்‌ கணவருக்கு உண்மை தெரிந்து விட்டதாக நினைத்துக்‌ கொண்டு பரபரப்படைந்தது, அவருடன்‌ சவால்‌ சண்டை புரிவதற்குக்‌ தயார்‌ செய்தது, குண்டு 
அவர்‌ மீது படாமல்‌ காற்றிலே சுடுவதென்று தீர்மானித்துக்‌ 
கொண்டது, பிறகு அந்தப்‌ பெண்‌ மனமொடிந்து போய்க்‌ குளத்திலே விழுந்து சாவதற்காகத்‌ தோட்டத்துக்குள்‌ ஒடத்‌ தாம்‌ பதறிப்‌ போய்‌ அவளைக்‌ தேடிக்‌. கொண்டு பின்னால்‌ ஒடி.யது முதலான பலவற்றையும்‌ அவர்‌ நினைத்துப்‌ பார்த்தார்‌. 
“அவளிடமிருந்து பதில்‌ கிடைக்கும்‌ வரை நான்‌ போவதற்கில்லை, ஒன்றும்‌ செய்வகுற்கில்லை'” என்று தமக்குத்‌ தாமே கூறிக்‌ கொண்டார்‌. ஒரு வாரத்துக்கு முன்பு நெஹ்லூதவ்‌ 
அவளுக்குத்‌ தமது இறுதியான முடிவைத்‌ தெரிவித்துக்‌ கடிதம்‌ எழுதியிருந்தார்‌. குற்றம்‌ அனைத்துக்கும்‌ தாமே பொறுப்பாளி என்றும்‌, பாவமன்னிப்பு பெற எந்தத்‌ தண்‌டனையும்‌ ஏற்கக்‌ தயாராயிருப்பதாகவும்‌ எழுதியிருந்தார்‌. தம்மிடையிலான உறவு முடிவுற்று விட்டதாகக்‌ கருதுவதாகவும்‌ அவளுடைய நன்மையை உத்தேசித்தே இப்படிச்‌ சொல்‌வதாகவும்‌ அறிவித்திருந்தார்‌. இந்தக்‌ கடிதத்துக்கு இன்னும்‌ 
அவளிடமிருந்து பதில்‌ வரவில்லை, இந்தப்‌ பதிலுக்காகத்‌தான்‌ அவர்‌ காத்திருந்தார்‌. இன்னும்‌ பதில்‌ வராதது ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும்‌ இருக்கலாம்‌: உறவுக்கு 
முடிவு கட்ட அவள்‌ உடன்படாவிடில்‌ உடனே பதிலெழுதியிருப்பாள்‌, அல்லது இதற்கு முன்பு பல தரம்‌ செய்தது போல்‌ புறப்பட்டு நேரில்‌ அவரிடம்‌ வந்திருப்பாள்‌. யாரோ 
ஒரு இராணுவ அதிகாரி அவளை நாடிச்‌ செல்வகாக அடிபட்டு 
வந்த பேச்சு நெஹ்லூதவின்‌ காதுக்கும்‌ எட்டியிருந்தது. இதனால்‌ அவருக்குப்‌ பொறாமையும்‌ கடுப்பும்‌ ஏற்பட்டாலுங்‌ கூட,, தமது நெறிகெட்ட வாழ்விலிருந்து விடுதலை பெறலாமென்ற நம்பிக்கை அவருள்‌ வலுவடைந்து வந்தது. இன்னொரு கடிதம்‌ அவரது பண்ணையின்‌ தலைமைக்‌ காரியக்காரரிடமிருந்து வந்ததாகும்‌. முறைப்படிப்‌ பண்ணையை இளங்‌ கோமகன்‌ தமது அனுபவ உரிமைக்குக்‌ கொண்டு வருவதற்காசவும்‌, மற்றும்‌ இனி அனுசரிக்கப்பட வேண்டிய சாகுபடி ஏற்பாடு குறித்துத்‌ தீர்மானிப்பதற்காகவும்‌ நேரில்‌ 
அவர்‌ பண்ணைக்கு வந்து செல்ல வேண்டுமென்றுகாரியக்காரா்‌ எழுதியிருந்தார்‌. கோமகள்‌ இருந்த காலத்தில்‌ அனுசரிக்கப்‌பட்டு வந்த சாகுபடி ஏற்பாட்டை இனியும்‌ தொடர்ந்து அனுசரிப்பதா? அல்லது காரியக்காரர்‌ காலஞ்சென்ற கோமகளிடம்‌ முன்பு கூறி வந்தது போலவும்‌, தற்போது இளங்‌ 
கோமகளனிடத்தும்‌ கூறுவது போலவும்‌ உழுபடைச்‌ சாதனங்‌களையும்‌ முதலீட்டையும்‌ அதிகமாக்கித்‌ தற்போது விவசாயி 
களிடம்‌ வாரச்‌ சாகுபடிக்கு விடப்படும்‌ நிலங்களை நேரடியான பண்ணைச்‌ சாகுபடிக்கு மாற்றிக்‌ கொள்ளலாமா? என்று அவர்‌ கேட்டிருந்தார்‌. பண்ணைச்‌ சாகுபடிக்கு மாற்றுவது 
மிகவும்‌ இலாபகரமாக இருக்குமென்று அவர்‌ கூறினார்‌. முதல்‌ தேதியன்று அனுப்பப்பட்டிருக்க வேண்டிய மூவாயிரம்‌ ரூபிளை இன்னும்‌ தாம்‌ அனுப்பாததற்குக்‌ காரியக்காரர்‌ 
வருத்தம்‌ தெரிவித்தார்‌. இந்தப்‌ பணம்‌ அடுத்த அஞ்சலில்‌ 
அனுப்பப்படும்‌. விவசாயிகளிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியாமற்‌ போனதுதான்‌ தாமதகுத்துக்குக்‌ காரணமென்றும்‌, விவசாயிகள்‌ கொஞ்சங்கூட நேர்மையின்றி நடந்து 
கொண்டதால்‌ அரசாங்க அதிகாரிகளுக்கு மனு செய்ய 
வேண்டியிருந்ததென்றும்‌ அவர்‌ எழுதினார்‌. காரியக்காரர்‌ எழுதியிருந்த இந்தக்‌ கடிதம்‌ நெஹ்லூதவுக்கு ஒரு விதத்தில்‌ மகிழ்ச்சியளித்தது, இன்னொரு விதத்‌தில்‌ மனத்தை உறுத்துவதாக இருந்தது. பெருஞ்‌ சொத்துக்கு 
அதிபராகியுள்ளோமென்று நினைக்கையில்‌ அவருக்கு மகிழ்ச்சி 
யாக இருந்தது. ஆனால்‌ முன்பு தாம்‌ இளமைத்‌ துடிப்பு மிக்கவராக இருந்த போது ஹெர்பர்ட்‌ ஸ்பென்சரின்‌* கருத்‌துகளை ஆதரித்தார்‌, இந்தப்‌ பழக்கங்களை விட்டொழிக்க முடியுமென அவர்‌ நினைக்கவில்லை. அவற்றை விட்டொழிக்க வேண்டுமென்ற 
அவசியமும்‌ ஏற்படவில்லை, ஏனெனில்‌ இளைமைப்‌ பருவத்தில்‌ 
அவரிடமிருந்த திடமான கருத்துக்களும்‌ வைராக்கியமும்‌ 
துணிவும்‌ வியக்கத்‌ தக்க செயல்கள்‌ புரிய வேண்டுமென்ற ஆசையும்‌ அவரை விட்டு மறைந்து விட்டன. இரண்டாவது வழியை மேற்கொள்வதெனில்‌ நிலத்தில்‌ தனியார்‌ உடைமை நியாயமல்ல என்று ஸ்பென்சரின்‌ சமூக நிலையமைதியிலிருந்து 
அவர்‌ தெரிந்து கொண்ட தெளிவான, மறுக்க முடியாத வாதங்களை, பிற்பாடு ஹென்றி ஜார்ஜின்‌ புத்தகங்களில்‌ ஒப்பற்ற முறையில்‌ உறுதி செய்யப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்துக்‌ கண்களை மூடிக்‌ கொள்ள வேண்டும்‌. இது அவருக்கு முடியாத காரியம்‌. 
இதனால்தான்‌ காரியக்காரரின்‌ கடிதம்‌ அவர்‌ மனத்தை 
உறுத்துவதாக இருந்தது.

Comments